எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது; விலை விவரம் இதோ!
நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 361 ரூபாயாகும்.
375 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 42 ரூபாயால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இதன் புதிய விலை 417 ரூபாயாகும்.
ஆட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 35 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 341 ரூபாயாகும்.
சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை ஒரு ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இதன் புதிய விலை 359 ரூபாவாகக் காட்டப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய்யின் விலை ஐந்து ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் புதிய விலை 231 ரூபாய் எனவும் இலங்கை கனியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.