சுதந்திர தின ஒத்திகை; நடுவானில் சிக்கிய பாராசூட்டுகள்
சுதந்திர தின ஒத்திகையின் போது நான்கு பராசூட் வீரர்கள் இன்று(30) காலை சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

சுதந்திர தின ஒத்திகையின் போது நான்கு பராசூட் வீரர்கள் இன்று(30) காலை சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இரண்டு பராசூட் வீரர்கள் விமானப்படையைச் சேர்ந்தவர்கள், மற்ற இருவரும் இலங்கை இராணுவத்தில் இணைக்கப்பட்டவர்கள்.
இதனை, இலங்கை விமானப்படையின் பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
சுதந்திர தின ஒத்திகையை அடுத்து, தரையிறங்க முற்பட்ட நிலையில், நடுவானில் பாராசூட்டுகள் சிக்கியதில் நான்கு பராசூட் வீரர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.