சீனா சென்றார் மஹிந்த ராஜபக்ஷ: உயர்மட்ட பேச்சுக்கு வாய்ப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (27) காலை சீனா சென்றார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (27) காலை சீனா சென்றார்.
அங்கு சீனப் பிரதமர் லீ கியாங் மற்றும் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெய்ஜிங்கில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்ள விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் மஹிந்த அங்கு சென்றதாக கூறப்படுகின்றது.
சிங்கப்பூர் வழியாக பெய்ஜிங் சென்ற ராஜபக்ஷ, ஜூலை 1ஆம் திகதி நாடு திரும்புகிறார்.
இலங்கையானது ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ஷவின் சீன விஜயம் முக்கியமாக பார்க்கப்படுகின்றது.