பந்தங்களுடன் மிஹிந்தலைக்கு சென்ற வெளிநாட்டவர்கள்
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று நேற்று(03)இரவு மிஹிந்தல விகாரைக்கு வந்துள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று நேற்று(03)இரவு மிஹிந்தல விகாரைக்கு வந்துள்ளது.
மிஹிந்தலை புண்ணிய ஸ்தலத்தை அண்மித்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமையினால் சுற்றுலாப் பயணிகள் பந்தங்களை ஏற்றிக்கொண்டு செல்ல வேண்டியிருந்தது.
மிஹிந்தலை ரஜமஹா விகாரைக்கான மின்சார விநியோகத்தை துண்டிக்க மின்சார சபை நேற்று தீர்மானித்துள்ளது.
ஆட்சியாளர்களுக்கு எதிராக வெளியிட்ட கருத்துக்கள் காரணமாகவே இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் தலைவர் வணக்கத்துக்குரிய வலஹங்குனவேவே தம்மரதன தேரர் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.