கட்டார் நோக்கி பயணமானார் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கட்டார் நாட்டுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் செய்து உள்ளார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கட்டார் நாட்டுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் செய்து உள்ளார்.
டோஹாவில் நடக்கும் நிகழ்வில் பங்கேற்கவே அவர் அங்க சென்று உள்ளார்.
டோஹாவில் நடைபெறவுள்ள நிகழ்வில் உலக நாடுகள் எதிர்நோக்கும் முக்கியமான சவால்கள் குறித்து கலந்து உரையாடப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு சொல்கிறது.
இதையும் படிங்க: ஜனவரியில் மீண்டும் மின் கட்டண திருத்தம் அறிவிப்பு வெளியானது!
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது பயணத்தில், கட்டார் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேசவுள்ளார்.
இதன்போது கட்டாரில் உள்ள முக்கிய வர்த்தக நிறுவன தலைவர்களையும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் சந்தித்து பேசுவார் என தெரிகிறது.