மதுரை - கொழும்பு இடையிலான விமான சேவை ஆரம்பம்
தமிழந்நாட்டின் மதுரை மற்றும் இலங்கையின் கொழும்பு ஆகியர நகரங்களுக்கு இடையிலான விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழந்நாட்டின் மதுரை மற்றும் இலங்கையின் கொழும்பு ஆகியர நகரங்களுக்கு இடையிலான விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 'பட்ஜெட் கேரியர் ஸ்பைஸ்ஜெட்' என்ற விமான நிறுவனமே நேற்று (20) முதல் தனது சேவைகளை ஆரம்பித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 'ஸ்பைஸ்ஜெட்' அதன் அதிகாரபூர்வ இணைய முன்பதிவு முறையை ஆரம்பித்திருந்தது.
அதன்படி, நேற்று (20) முதல் வாரந்தோறும் ஆறு முறை விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமைகளை தவிர வாரத்தில் ஆறு நாட்கள் இந்த விமான சேவை முன்னெடுக்கப்படும்.