திடீரென சரிந்து விழுந்த தொலைதொடர்பு கோபுரம்! ஐவர் படுகாயம்
10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மிக உயரமான கோபுரமே இவ்வாறு பலத்த காற்றினால் தபால் நிலையத்தின் மேற்கூரையில் விழுந்துள்ளது.
கந்தளாய் நகரில் இன்று (04) பிற்பகல் வீசிய பலத்த காற்றினால் நகரின் மத்தியில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரம் சரிந்து விழுந்துள்ளது.
குறித்த தொலைத்தொடர்பு கோபுரம் அருகில் உள்ள தபால் நிலையத்தின் கூரை மீது விழுந்ததில் 5 பேர் காயமடைந்து கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த ஐந்து பேரும் தபால் நிலைய ஊழியர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மிக உயரமான கோபுரமே இவ்வாறு பலத்த காற்றினால் தபால் நிலையத்தின் மேற்கூரையில் விழுந்துள்ளது.