பயணப்பொதிகளில் மறைத்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட போதைப்பொருளுடன் ஐந்து பேர் கைது
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

பயணப்பொதிகளில் மறைத்து வைத்த நிலையில், 7 கோடி50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளுடன் ஐந்து நபர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று (மே 21) கைது செய்யப்பட்டுள்ளனர்.
57 வயதான பெண்ணிடம் நடத்திய நிலையில், விமான நிலைய சிசிடிவி கெமாராக்களை ஆய்வு செய்த பின்னர் ஏனையவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு 15, கொழும்பு 2 மற்றும் தெமட்டகொடை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளன்.
சந்தேக நபர்கள் இந்தியாவின் பெங்களூரு வழியாக இலங்கைக்கு வந்துள்ளனர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், அவர்களின் பயணப்பொதிகளில் 7.150 கிலோகிராம் 'குஷ்' போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.