நாடாளுமன்ற உறுப்பினர் கார் மீது துப்பாக்கிச் சூடு: சி.ஐ.டி விசாரணை!

பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

செப்டெம்பர் 18, 2023 - 15:49
நாடாளுமன்ற உறுப்பினர் கார் மீது துப்பாக்கிச் சூடு: சி.ஐ.டி விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வுத்  திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் கார் மீது நேற்று (17) இரவு 10.35 மணியளவில் சில குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்கு முன்பாக இந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!