லிந்துலை தீவிபத்தில் 3 வீடுகள் தீக்கிரை
லிந்துலை பெரிய ராணிவத்தை பகுதியில் இன்று (04) காலை தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லிந்துலை பெரிய ராணிவத்தை பகுதியில் இன்று (04) காலை தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீவிபத்தில் 3 வீடுகள் எரிந்து சாம்பலாகி உள்ளதாகவும் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொது மக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.