ஆப்கானிஸ்தான் - இலங்கை மோதும் 2ஆவது டி20 போட்டி இன்று
இரு நாடுகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி 4 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டி இன்று (19) நடைபெறவுள்ளது.
இப்போட்டி தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி 4 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
இதேவேளை, இலங்கை அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் மூன்றாவது T20 போட்டிகளுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்திருந்தது.