இன்று முதல் கட்டணத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் கடவுச்சீட்டு கட்டணம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் கடவுச்சீட்டு கட்டணம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
5000 ரூபாயாக இருந்த சாதாரண சேவை வெளிநாட்டு கடவுச்சீட்டு கட்டணம் 10,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை திருத்தம் இணையதளம் ஊடான மற்றும் நேரடி கடவுசீட்டு பெறும் முறைகளுக்கு செல்லுபடியாகும் என குடிவரவுத் துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ரயிலில் கொண்டு செல்லப்படும் பொருட்கள் மற்றும் பொதிகளுக்கான விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி 50 ரூபாயாக இருந்த குறைந்தபட்ச கட்டணம் 150 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இடிபொல தெரிவித்தார்.