வீசா கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
இலங்கைக்கு ஏழு நாடுகளில் இருந்துவருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கான வீசா கட்டண விலக்கு ஒருமாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு ஏழு நாடுகளில் இருந்துவருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கான வீசா கட்டண விலக்கு ஒருமாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இதனை, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
குறித்த வீசா கட்டண விலக்கு எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் நடைமுறையில் இருக்கும்.
இந்தியா, ரஷ்யா, சீனா, இந்தோனேசியா, தாய்லாந்து, ஜப்பான் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கே இந்த சலுகை வழங்கப்படுகின்றது.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரியந்த பெர்னாண்டோ கூறியுள்ளார்.