குண்டுவெடிப்பு வழக்கில் முன்னாள் ஜனாதிபதி சிறிசேன சாட்சியம்
வழக்கில் சாட்சியமளிக்குமாறு அனுப்பப்பட்ட அழைப்பாணைக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தில் ஆஜரானார்.

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவவில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் முயற்சி தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (28) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.
2008 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் திகதி அப்போதைய விவசாய அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை குறிவைத்து தற்கொலை குண்டுவெடிப்பு முயற்சிக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வழக்கில் சாட்சியமளிக்குமாறு அனுப்பப்பட்ட அழைப்பாணைக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி சிறிசேன நீதிமன்றத்தில் ஆஜரானார்.