EPF கடன் விதிமுறைகளை தளர்த்த நடவடிக்கை
ஊழியர் சேமலாப நிதியின் 30% நிலுவைத் தொகையைப் பெறுவது தொடர்பான தற்போதைய நிபந்தனைகளைத் தளர்த்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஊழியர் சேமலாப நிதியின் 30% நிலுவைத் தொகையைப் பெறுவது தொடர்பான தற்போதைய நிபந்தனைகளைத் தளர்த்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தற்போதுள்ள நிலைமைகளின் சிக்கலான தன்மையினால், முறைகேடுகள் இடம்பெறுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, அது தொடர்பில் அவதானம் செலுத்தி மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிபந்தனைகளை தளர்த்துவது தொடர்பான ஆலோசனைகளை திணைக்களம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.