மின்சாரக் கட்டண திருத்தம் கேள்விக்குறி

எனினும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்தச் செய்தியை மறுத்துள்ளது.

ஜனவரி 9, 2024 - 11:08
மின்சாரக் கட்டண திருத்தம் கேள்விக்குறி

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவொன்றை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை  கையளித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

எனினும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்தச் செய்தியை மறுத்துள்ளது. 

அதாவது,  தனது ஆணைக்குழுவின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நேற்று (08) வரை அவ்வாறான முன்மொழிவு ஆணைக்குழுவிற்கு கிடைக்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!