இரு மாதங்களில் மின் கட்டணம் குறையலாம் : அமைச்சர் நம்பிக்கை
எரிபொருட்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. அத்தியாவசிய மருந்துகளுக்கு சிக்கல் ஏற்பட்டது. ஆனால், தற்போது இவை எல்லாவற்றிலும் இருந்து நாடு படிப்படியாக மீண்டு வருகிறது.

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் மின் கட்டணம் குறையக் கூடும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நம்பிக்கை தெரிவித்தார்.
கம்பஹாவின் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், “நாட்டில் ஒரு வருடத்துக்கு முன்னர் என்ன நடந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். 13 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கும் நாடாக இலங்கை இருந்தது.
“எரிபொருட்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. அத்தியாவசிய மருந்துகளுக்கு சிக்கல் ஏற்பட்டது. ஆனால், தற்போது இவை எல்லாவற்றிலும் இருந்து நாடு படிப்படியாக மீண்டு வருகிறது.
“அவ்வாறே, எதிர்வரும் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் மின் கட்டணம் குறையும் என நம்புகிறோம்” என்றார்.