தேர்தல்கள் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள் நியமனம்

துறைசார் நிபுணத்தும் கொண்டவர்களுக்கு மேற்படி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஜுன் 29, 2023 - 19:33
தேர்தல்கள் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள் நியமனம்

தேர்தல்கள் மற்றும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள், ஜனாதிபதியினால் பெயரிடப்பட்டுள்ளனர்.

துறைசார் நிபுணத்தும் கொண்டவர்களுக்கு மேற்படி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் எல்.டீ.பி. தெஹிதெனியவும், ஏனைய உறுப்பினர்களாக நிமலசேன கார்தியா புந்திஹேவா, தையமுத்து தனராஜ், பேராசிரியர் பர்சானா பாத்திமா மற்றும் கலாநிதி தினுக் குணத்திலக்க ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக முன்னாள் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்கவும் ஏனைய உறுப்பினர்களாக எம்.ஏ.பத்மசிறி சந்திரவன்ச பெரேரா மற்றும் அமீர் மொஹமட் பாயிஸ் உள்ளிட்டவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!