கோடிக்கணக்கான சொத்துகளை பூனைகள் மற்றும் நாய்களுக்கு எழுதி வைத்த மூதாட்டி

ஆனாலும் அந்த மூதாட்டி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டபோது அவரது பிள்ளைகள் 3 பேரும் ஒரு முறை கூட வந்து பார்க்கவில்லை. 

ஜனவரி 28, 2024 - 17:31
கோடிக்கணக்கான சொத்துகளை பூனைகள் மற்றும் நாய்களுக்கு எழுதி வைத்த மூதாட்டி

சீனாவில் ஷாங்காய் நகரை சேர்ந்தவர் லியூ. மூதாட்டியான இவர் தனக்கு சொந்தமான 2.8 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள சொத்துகளை தனது 3 பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுக்கும் வகையில் உயில் எழுதி வைத்தார்.

ஆனாலும் அந்த மூதாட்டி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டபோது அவரது பிள்ளைகள் 3 பேரும் ஒரு முறை கூட வந்து பார்க்கவில்லை. 

இது லியூவுக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியது. இதனால் ஆவேசம் அடைந்த அவர் தனது உயிலை மாற்றி எழுதி சொத்துகள் அனைத்தையும் தான் வளர்க்கும் நாய்கள் மற்றும் பூனைகள் மீது எழுதி வைத்துள்ளார். 

இதையறிந்த அவரது பிள்ளைகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சீனாவில் வளர்ப்பு பிராணிகள் மீது சொத்து எழுதி வைக்க அந்நாட்டு சட்டத்தில் இடமில்லை

இதனால், கால்நடை மருத்துவ மனையைஆரம்பித்து, நாய், பூனையை நன்றாக பராமரிக்கும்படி, விலங்குகள் நல அமைப்பிடம் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!