மியன்மாரில் பாரிய நிலநடுக்கம்... பேங்காக்கில் உணரப்பட்ட அதிர்வு
7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக பேங்காக்கில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியுள்ளன.

மியன்மாரின் மாந்தளை பகுதிக்கு அருகே வெள்ளிக்கிழமை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், அதன் அதிர்வுகள் தாய்லந்தின் பேங்காக் நகர் வரை உணரப்பட்டுள்ளது.
7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக பேங்காக்கில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியுள்ளன.
நிலநடுக்கத்தை அடுத்து, நூற்றுக்கணக்கானோர் கட்டடங்களிலிருந்து வெளியேறி வீதிகளில் ஓடியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க புவியியல் ஆய்வு மற்றும் ஜெர்மனியின் புவி அறிவியலுக்கான ஜிஎஃப்இசட் மையம், வெளியிட்ட முதற்கட்ட அறிக்கைகளின்படி, 10 கிலோமீட்டர் (6.2 மைல்கள்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், நிலநடுக்கத்தின் மையப்பகுதி அண்டை நாடான மியான்மரில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.