சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று முதல் E-Visa வழங்கும் முறை ஆரம்பம்

சுற்றுலாப் பயணிகளுக்கு மாத்திரம் “இ-விசா” முறை இன்று (17) முதல் அமுல்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகழ்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 17, 2024 - 12:18
சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று முதல் E-Visa வழங்கும் முறை ஆரம்பம்

சுற்றுலாப் பயணிகளுக்கு மாத்திரம் “இ-விசா” முறை இன்று (17) முதல் அமுல்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகழ்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆரம்பத்தில் ஐந்து மொழிகளில் "இ-விசா" விண்ணப்பிக்கும் வாய்ப்பு உள்ளது என்று  திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிட்டார்.

"புதிய தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்ட இ-விசா முறை இன்று முதல் அமுல்படுத்தப்படும். அதன்படி, முதலில் சுற்றுலா பயணிகளிடம் இருந்து தொடங்குவோம். அதன் பிறகு ஏனையவர்களுக்கு விண்ணப்பிக்கும் வசதியை வழங்குவோம். 

இணைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அனைத்து வகையான விசாக்களும் பாதுகாப்பு அடிப்படையில் கூடுதல் ஆவணங்களை எடுத்துக்கொள்வதைக் கருத்தில் கொண்டு 5 மொழிகளில் நாங்கள் இதனை ஆரம்பித்துள்ளோம். 03 வாரங்களுக்குள் அனைத்து வீசா விண்ணப்பங்களுக்கும் இந்த முறை பயன்படுத்தப்படும்.

தற்போது சுற்றுலா விசாக்களுக்கு மட்டுமே இந்த முறையை அறிமுகப்படுத்தி உள்ளோம். அடுத்த சில வாரங்களில் கல்வி, வணிகம் என அனைத்து விசா வகைகளுக்கும் இந்த முறையை அறிமுகப்படுத்த உள்ளோம்” என அவர் கூறியுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!