தற்காலிக ஓட்டுநர் உரிமம் தொடர்பில் விசேட அறிவிப்பு
மோட்டார் போக்குவரத்து துறையில் அச்சிடுவதற்காக குவிந்துள்ள ஓட்டுனர் உரிமங்களின் எண்ணிக்கை தற்போது ஒன்பது லட்சத்தை தாண்டியுள்ளது.

தற்போது குவிந்து கிடக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சாரதி அனுமதிப்பத்திரம் ஆறு மாதங்களில் வழங்க எதிர்பார்க்கப்படுவதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மோட்டார் போக்குவரத்து துறையில் அச்சிடுவதற்காக குவிந்துள்ள ஓட்டுனர் உரிமங்களின் எண்ணிக்கை தற்போது ஒன்பது லட்சத்தை தாண்டியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், தற்போது தற்காலிக ஓட்டுனர் உரிமம் பெற்றவர்களின் உரிமம் காலாவதியாகி இருந்தால், ஓட்டுநர் உரிம அட்டை இன்னும் கிடைக்கவில்லை என்றால், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலகம் அல்லது மாவட்ட அலுவலகங்களில் காலத்தை நீட்டிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.