இலங்கை ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை ரூபாயின் பெறுமதி: செலான் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் மாற்றமின்றி 297.75 ரூபாய் மற்றும் 307.25 ரூபாயாக உள்ளது.

இலங்கை ரூபாயின் பெறுமதி
புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (ஜூலை 25) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி நிலையானதாக உள்ளது.
செலான் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் மாற்றமின்றி 297.75 ரூபாய் மற்றும் 307.25 ரூபாயாக உள்ளது.
NDB வங்கியில், அமெரிக்க டொலரின் வாங்கும் விலை 296.75 ரூபாயில் இருந்து 296.65 ஆகவும், விற்பனை விலை 307.75 ரூபாயில் இருந்து 307.65 ஆகவும் மாற்றமடைந்துள்ளது.
மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் வாங்கும் விலை 298.36 ரூபாயில் இருந்து 297.87 ஆகவும், விற்பனை விலை 309.07ரூபாயில் இருந்து 308.56 ஆகவும் குறைவடைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் வாங்குதல் மற்றும் விற்பனை விகிதங்கள் மாறாமல் 297.67 ரூபாய் மற்றும் ரூ. 307.50 ரூபாய் ஆக உள்ளன.
சம்பத் வங்கி அமெரிக்க டொலரின் கொள்முதல் விலையில் மாற்றம் இல்லாமல் 299 ரூபாய் மற்றும் விற்பனை விலை 308 ரூபாய் ஆக உள்ளன.