மீண்டும் அதிகரிக்கும் டொலரின் பெறுமதி! ரூபாயில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (21)அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.

ஆகஸ்ட் 21, 2023 - 17:08
மீண்டும் அதிகரிக்கும் டொலரின் பெறுமதி! ரூபாயில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (21)அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.

மக்கள் வங்கியில் வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் 314.83 ரூபாயாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 315.31 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதேவேளை 330.31 ரூபாயாக இருந்த அமெரிக்க டொலரின் விற்பனை விலை 330.82 ரூபாயாக அதிகரித்துள்ளது.

கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை முறையே 312.75 மற்றும் 328 ரூபாயாக மாறாமல் உள்ளது.

மேலும் சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை முறையே 317 மற்றும் 328 ரூபாவாக பதிவாகியுள்ளது.    

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!