இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் விளையாட தகுதியுள்ள அணி எது தெரியுமா?  பிரபல வீரர் அதிரடி!

இரு அணிகளும் தொடர்ந்து 300 ரன்களை அடிப்பது, பந்துவீச்சில் பட்டையைக் கிளப்புவது என விளையாடி வந்தார்கள். 

நவம்பர் 9, 2023 - 12:19
இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் விளையாட தகுதியுள்ள அணி எது தெரியுமா?  பிரபல வீரர் அதிரடி!

இந்திய அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வெற்றிகளை குவித்து வருகிறது. இத்தொடரில் இந்திய அணிக்கு சரியான எதிரி தென்னாப்பிரிக்கா என கணிக்கப்பட்டிருந்தது. 

இத்தொடரில் இரு அணிகளும் தொடர்ந்து 300 ரன்களை அடிப்பது, பந்துவீச்சில் பட்டையைக் கிளப்புவது என விளையாடி வந்தார்கள். 

இரண்டு அணிகளும் அரையிறுதிக்கு தகுதிபெற்றப் பிறகுதான் விளையாடும் நிலை இருந்ததால், அழுத்தங்கள் இல்லாமல் விளையாடி இரு அணிகளும் பெரிய ஸ்கோர்களை பதிவுசெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. 

அண்மைய போட்டியில் இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டலாக செயல்பட்டு அசத்தியது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 326 ரன்களை குவித்த நிலையில், அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி வெறும் 83 ரன்கள் சுருண்டு, 243 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

இப்போட்டி குறித்து தற்போது பேட்டிகொடுத்துள்ள ஆஸ்திரேலிய அணி முன்னாள் வீரர் பிராட் ஹக், ''இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான ஆட்டத்தைப் பார்த்தப் பிறகு, இறுதிப்போட்டி தேவையில்லை என்பதுபோல் இருக்கிறது. 

இறுதிப் போட்டியை நடத்தினால், அந்த போட்டியில் இந்தியாவுக்கு எதிராக உலக XI அணியைத் தான் விளையாட வைக்க வேண்டும். அந்த அளவிற்கு இந்திய அணி பலமிக்க அணியாக இருக்கிறது'' எனக் கூறி இறுக்கின்றார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!