நாபீர் பவுண்டேஷன் அமைப்பினால் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு
நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகரும் பொறியியலாளருமான உதுமான் கண்டு நாபீரின் வழிகாட்டலின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வு, நாபீர் பவுண்டேஷனின் சம்மாந்துறை கோரைக் கோவில் மகளிர் அமைப்பின் தலைவியான ரஹீமாவின் தலைமையில் நடைபெற்றது.

வருமானம் குறைந்த மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டம், நாபீர் பவுண்டேஷனின் செயற்றிட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.
குறித்த வேலைத்திட்டத்தின் ஏழாவது கட்டம், சம்மாந்துறை பிரதேசத்திற்கு உட்பட்ட கோரைக் கோவில் முஸ்லிம் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட
குடும்பங்களுக்கான உணவுப் பொருட்கள் இன்று (19) வழங்கப்பட்டன.
நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகரும் பொறியியலாளருமான உதுமான் கண்டு நாபீரின் வழிகாட்டலின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வு, நாபீர் பவுண்டேஷனின் சம்மாந்துறை கோரைக் கோவில் மகளிர் அமைப்பின் தலைவியான ரஹீமாவின் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பொறியியலாளர் உதுமான் கண்டு நாபீரின் பாரியார் எம்.எல். சனாஸியா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு உணவுப் பொதிகளை வழங்கினார்.
குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக உணவு வழங்கும் நிகழ்வு, எதிர்வரும் நாட்களிலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(எஸ். சினீஸ் கான்)