பேனா மற்றும் பென்சில் தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்பம்: தேர்தல் ஆணைக்குழு விளக்கம்

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குச் சீட்டைக் குறிக்க பேனாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

செப்டெம்பர் 21, 2024 - 20:09
செப்டெம்பர் 21, 2024 - 20:12
பேனா மற்றும் பென்சில் தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்பம்: தேர்தல் ஆணைக்குழு விளக்கம்

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்குச் சீட்டுகளில் பென்சில்கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டாம் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குச் சீட்டைக் குறிக்க பேனாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இருப்பினும், வாக்காளர்களுக்கு பென்சில்கள் வழங்கப்பட்டதாக ஆணைக்குழுவுக்கு புகார்கள் வந்துள்ளன, இதனால் வாக்குச் சீட்டுகளின் செல்லுபடியாகும் தன்மை குறித்த கவலைகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், பென்சில்களால் குறிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் செல்லுபடியாகும் என்றும், இது தொடர்பாக பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.

அத்துடன், வாக்குச் சீட்டுகளில் குறியிடுவதற்கு பேனாக்களை பயன்படுத்துமாறு வாக்களிப்பு நிலையங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமாகி இன்று மாலை 04.00 மணிக்கு நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!