டயானா கமகே விவகாரம்... நடந்தது என்ன... வெளியானது வீடியோ

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா தன்னை தாக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே குற்றம் சுமத்தியிருந்தார்.

ஒக்டோபர் 20, 2023 - 22:25
டயானா கமகே விவகாரம்... நடந்தது என்ன... வெளியானது வீடியோ

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா தன்னை தாக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே குற்றம் சுமத்தியிருந்தார்.

பாராளுமன்ற வளாகத்துக்குள் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைக்கு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

அதற்காக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

டயானா கமகே விவகாரத்தை விசாரிக்க குழு நியமனம்

இந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டாரவுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை தணிக்க முயன்ற பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேராவை டயானா தாக்க முற்படும் காணொளியொன்று வெளியாகியுள்ளது.

குறித்த வீடியோவை அங்கிருந்த ஒருவர் பதிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அணியின் துணை தவிசாளர் ரெஹான் ஜெயவிக்ரம இந்த வீடியோவை எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!