மோசமடைந்துள்ள காற்றின் தரம்; சுவாச நோயாளிகள் அவதானம்
இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பின் காற்று மாசு மதிப்பு 127 ஆக பதிவாகியுள்ளதால், இந்த நிலை சுவாச நோய் பாதிப்புக்குள்ளானவர்களின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், காலி கராப்பிட்டியில் 90 ஆகவும், புத்தளத்தில் 88 ஆகவும், குருநாகல் மற்றும் அநுராதபுரத்தில் 86 ஆகவும் காற்று மாசு சுட்டெண் பதிவாகியுள்ளது.
நாட்டின் காற்று மாசுக் குறியீடு 50 ஐ தாண்டி உள்ள நிலையில், சுவாச நோயாளர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், மக்கள் இது குறித்து கவனம் செலுத்துமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.