ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் விவரம்

மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர ஜனாதிபதித் தேர்தலுக்கான  வேட்புமனுவை முதலாவதாகக் கையளித்திருந்தார். 

ஆகஸ்ட் 15, 2024 - 13:51
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் விவரம்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள், இன்று (15) காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. 

சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச, வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். 

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார, வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். 

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். 

இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்க வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர ஜனாதிபதித் தேர்தலுக்கான  வேட்புமனுவை முதலாவதாகக் கையளித்திருந்தார். 

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் ஆவணங்களை பரிசீலிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!