உள்நாட்டு சமையல் எரிவாயு தேவை அதிகரிப்பு
விடுமுறை காலம் என்பதால், உள்நாட்டு சமையல் எரிவாயுவுக்கு அதிக தேவை இருப்பதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயு
விடுமுறை காலம் என்பதால், உள்நாட்டு சமையல் எரிவாயுவுக்கு அதிக தேவை இருப்பதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.
இதன்படி, 40,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்று (28) உள்ளூர் சந்தைக்கு வழங்கப்படும் என லிட்ரோ தெரிவித்துள்ளது.
அத்துடன், அத்தியாவசிய சேவைகளுக்கு சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நவம்பர் 30 ஆம் திகதி 4,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டிற்கு வரத் திட்டமிடப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், டிசெம்பர் 1 முதல் நாளாந்தம் 100,000க்கும் அதிகமான சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க முடியும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.