இலங்கையில் கடந்த 10 வருடங்களில் பிறப்பு எண்ணிக்கை வீழ்ச்சி
இலங்கையில் கடந்த 10 வருடங்களில் பிறப்பு எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் கடந்த 10 வருடங்களில் பிறப்பு எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிட்டத்தட்ட 25 வீதத்தால் பிறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது.
குறித்த அறிக்கையின்படி, 2013 இல் இலங்கையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை 365,762 ஆகவும், 2022 இல் பிறந்தவர்களின் எண்ணிக்கை 275,321 ஆகவும் காணப்படுகின்றது.
அத்துடன், 2021 ஆம் ஆண்டில் 284,848 பிறப்புகள் பதிவாகியுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.