மியன்மார் நிலநடுக்கம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 1600ஆக அதிகரிப்பு
நாட்டின் இரண்டாவது பெரிய நகரான மாண்டலேயில் பெரியளவில் பாதிப்பு எற்பட்டதுடன், நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த பகுதிக்கு அருகே அந்த நகரம் உள்ளது.

மியன்மாரில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1600ஐத் தாண்டியுள்ளதுடன், 3,400க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
அத்துடன், சுமார் 140 பேரைக் காணவில்லை என்ற நிலையில், இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருப்போரைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.
நாட்டின் இரண்டாவது பெரிய நகரான மாண்டலேயில் பெரியளவில் பாதிப்பு எற்பட்டதுடன், நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த பகுதிக்கு அருகே அந்த நகரம் உள்ளது.
Sky-villa எனும் 12 மாடிகள் கொண்டிருந்த குடியிருப்பு கட்டடத்தில் சுமார் 6 மாடிகள் இடிந்து விழுந்த நிலையில், அந்த இடிபாடுகளில் 90 பேர் சிக்கியிருப்பதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, அங்கு மின்சாரம், தொலைபேசி தொடர்பு, இணையச் சேவைகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தாலய்லந்துத் தலைநகரிலும் மீட்புப் பணிகள் இரண்டாம் நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நேற்று முன் தினம் மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.7 ரிக்டர் அளவாகப் பதிவானதுடன், அதனைத் தொடர்ந்து கடும் அதிர்வுகள் அக்கம்பக்க நாடுகளிலும் உணரப்பட்டன.
தாய்லாந்தில் உணரப்பட்ட அதிர்வால் விழுந்த கட்டடத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கர்கள் சிக்கியிருக்கக் கூடும் என்றும், பேங்காக்கில் 12 பேர் உயிரிழந்தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.