உலகக்கோப்பை 2023 பார்வையாளர்கள் வருகையில் புதிய சாதனை

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. 10 அணிகள் கலந்துகொண்ட லீக் சுற்றுகளின் முடிவில் இந்தியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. 

நவம்பர் 22, 2023 - 22:30
உலகக்கோப்பை 2023 பார்வையாளர்கள் வருகையில் புதிய சாதனை
Image Source: Google

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. 10 அணிகள் கலந்துகொண்ட லீக் சுற்றுகளின் முடிவில் இந்தியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. 

கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த ஆட்டம் உலகின் மிகப்பெரிய மைதானமான 1.30 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. 

இப்போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி 6ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டி உள்பட, இந்த உலகக் கோப்பை தொடர் முழுவதையும் 1.25 மில்லியன் ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர். 

45 நாட்கள் நடந்த இந்த தொடரை கிட்டத்தட்ட 12,50,307 ரசிகர்கள் மைதானத்துக்கு வந்து பார்த்துள்ளனர். இது உலக சாதனையாக மாறியுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்த உலகக் கோப்பை தொடரை 1,016 மில்லியன் மக்கள் பார்த்ததே சாதனையாக இருந்தது.

தற்போது அதனை இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை தொடர் முறியடித்துள்ளது. விளையாட்டு வரலாற்றில் மிகப்பெரிய ஐசிசி நிகழ்வுகளில் ஒன்றாக இது மாறியுள்ளது. 

இந்த தொடரின் ஆரம்பத்தில் பார்வையாளர்கள் குறைவாகவே வந்தனர். எனினும், இந்திய அணியின் ஆட்டங்களுக்கு பிறகு அதிகமான ரசிகர்கள் வருகைப் புரிந்ததால் இந்த அளவுக்கு எண்ணிக்கை கூடியுள்ளது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!