உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு: முக்கிய வேகப்பந்து வீச்சாளர் இல்லை

உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது. கேப்டனாக பாபர் ஆசம் நீடிக்கிறார்.

செப்டெம்பர் 22, 2023 - 19:02
உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு: முக்கிய வேகப்பந்து வீச்சாளர் இல்லை

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர் 5 தொடங்கவுள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டித் தொடரில் பெரும்பாலான நாடுகள் தங்களது அணிகளை அறிவித்து விட்டன.

உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது. கேப்டனாக பாபர் ஆசம் நீடிக்கிறார்.

சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா குணமடையாததால் இடம் பெறவில்லை. அவருக்கு பதில் ஹசன் அலி சேர்க்கப்பட்டுள்ளார். சுழற்பந்து வீச்சாளர் உஸ்மா மிர் இடம் பெற்றுள்ளார்.

பாபா ஆசம் (கேப்டன்), பகர் ஜமான், இமாம்-உல்-ஹக், அப்துல்லா ஷபீக், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, அகா சல்மான், முகமது நவாஸ், ஷதாப் கான், உஸ்மா மிர், ஷகீன்ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவூப், முகமது வாசிம், ஹசன் அலி.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!