வங்கிகள் எடுத்துள்ள முக்கிய தீர்மானம் - வெளியான அறிவிப்பு
வணிக வங்கிகள் கடனட்டைகளுக்கான வட்டி வீதத்தை குறைப்பது தொடர்பான தீர்மானமொன்றை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வணிக வங்கிகள் கடனட்டைகளுக்கான வட்டி வீதத்தை குறைப்பது தொடர்பான தீர்மானமொன்றை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த வட்டி வீதத்தை எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து குறைக்க வணிக வங்கிகள் தீர்மானித்துள்ளன.
தற்போது குறித்த வட்டி வீதமானது 34 சதவீதம் வரை காணப்படும் நிலையில், கடனட்டைகளுக்கான வட்டி வீதம் 30 சதவீதமாக குறைக்கப்பட உள்ளது.
இலங்கை மத்திய வங்கி அண்மையில் வட்டி வீதங்களை குறைத்திருந்ததுடன், வர்த்தக வங்கிகளும் அதற்கேற்ப வட்டி வீதங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்திருந்தார்.
அத்துடன், அரச மற்றும் வர்த்தக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய முன்னதாக ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார்.
மத்திய வங்கியினால் வழங்கப்படும் கடன்களுக்கான கொள்கை வட்டி வீதம் 12%ஆக குறைக்கப்பட்டுள்ளது. 16.5% வரை காணப்பட்ட கொள்கை வட்டி வீதமே தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
இந்த கடன் வட்டி சலுகைகள் பொதுமக்களுக்கு கிடைக்கின்றதா என்பது தொடர்பில் மத்திய வங்கி தீவிர கவனம் செலுத்தியுள்ளது.