வடக்கு காணிகளை கையகப்படுத்தும் வர்த்தமானியை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவு

வடக்கில் காணிகளை சுவீகரிக்கும் வர்த்தமானியை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஜுன் 27, 2025 - 20:00
ஜுன் 27, 2025 - 20:01
வடக்கு காணிகளை கையகப்படுத்தும் வர்த்தமானியை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவு

வடக்கில் காணிகளை சுவீகரிக்கும் 28.03.2025 திகதியிடப்பட்ட 2430/25 இலக்கமிடப்பட்ட வர்த்தமானியை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தாக்கல் செய்த மனு, இன்று வெள்ளிக்கிழமை (27) விசாரிக்கப்பட்ட பின்னர் குறித்த வர்த்தமானியை தற்காலிகமாக வலிதற்றதாக்கும் வகையில் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வழக்கு விசாரணை, எதிர்வரும் ஜூலை மாதம் 02ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அதற்கிடையில் குறித்த வர்த்தமானியை மீளப் பெறுவதற்கான  வர்த்தமானியை அரசாங்கம் வெளியிட்டால், அதனை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!