குக் வித் கோமாளி சீசன் 4: டைட்டில் வின்னர்  மைம் கோபிக்கு குவிந்த பரிசுகள்!

கடந்த சில மாதங்களாக விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் நான்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது. 

ஜுலை 31, 2023 - 15:50
குக் வித் கோமாளி சீசன் 4: டைட்டில் வின்னர்  மைம் கோபிக்கு குவிந்த பரிசுகள்!

குக் வித் கோமாளி 

கடந்த சில மாதங்களாக விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் நான்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது. 

இந்த சீசனில் 12 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் 6 போட்டியாளர்கள் இறுதி போட்டியில் பங்கேற்க வாய்ப்பு பெற்றனர். 

இவர்களில் விசித்ரா, மைம் கோபி, ஷிவாங்கி, கிரன், ஆண்ட்ரியன் மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே ஆகிய 6 போட்டியாளர்கள் நேற்று இறுதி போட்டியில் கலந்து கொள்ள தேர்வாகியிருந்தனர்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் மிகவும் சிறப்பாக சமையல் செய்த மைம் கோபி டைட்டில் பட்டம் வென்றார். இரண்டாவது இடம் ஸ்ருஷ்டிக்கும் மூன்றாவது இடம் விசித்ராவுக்கும் கிடைத்தது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மூன்று சீசன்களிலும் பெண் போட்டியாளர்கள் டைட்டில் பட்டதை வென்ற நிலையில் முதல் முறையாக ஒரு ஆண் போட்டியாளர் டைட்டில் பட்டம் வென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனை அடுத்து மைம் கோபிக்கு குக் வித் கோமாளி குழுவினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குக் வித் கோமாளி பரிசு

டைட்டில் பட்டம் வென்ற மைம் கோபிக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு கிடைத்தது. இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்ற ஸ்ருஷ்டிக்கு மூன்று லட்ச ரூபாய் பரிசளிக்கப்பட்டது. 

மேலும் டைட்டில் வின்னருக்கு கோமாளியாக இருந்த குரேஷி மற்றும் மோனிஷா ஆகிய இருவருக்கும் தலா ஒரு லட்சம் பரிசுகளும் சில பொருட்களும் பரிசாக அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!