கொழும்பு - பதுளை பிரதான வீதியில் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிப்பு
கொழும்பு - பதுளை பிரதான வீதியின் பத்கொடை பிரதேசத்தில் மண்சரிவு காரணமாக வீதியின் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு - பதுளை பிரதான வீதியின் பத்கொடை பிரதேசத்தில் மண்சரிவு காரணமாக வீதியின் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று (05) பிற்பகல் அப்பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக பத்கொடை பிரதேசத்தில் மண் சரிவு ஏற்பட்டது.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நேற்றிரவு வீதியின் சீரமைப்பு பணிகளுக்கு இடையூறு ஏற்பட்ட நிலையில், இன்று அந்த பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மேற்பார்வையின் கீழ் குறித்த புணரமைப்பு பணிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பத்கொடை பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள வீடுகளை சேர்ந்த 10 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.