டயானா கமகே விவகாரத்தை விசாரிக்க குழு நியமனம்
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று பிற்பகல் பாராளுமன்ற அறைக்கு வெளியே பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் தாக்கப்பட்டதாக பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோருக்கு இடையில் பாராளுமன்ற வளாகத்துக்குள் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைக்கு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
அதற்காக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே மீது தாக்குதல்
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று பிற்பகல் பாராளுமன்ற அறைக்கு வெளியே பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் தாக்கப்பட்டதாக பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இதேவேளை, பிரதமரின் பிரேரணையின் பிரகாரம் பாராளுமன்றமும் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையிலான விசாரணைக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ, கயந்த கருணாதிலக்க, இமித்யாஸ் பாக்கீர் மற்றும் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.