கொழும்பு மாவட்டத்தில் அதிக நகர்ப்புற சனத்தொகை சதவீதம் - ஆய்வில் வெளியான தகவல்

இலங்கையின் நகர்ப்புற சனத்தொகை  44.57% ஆக அதிகரித்துள்ளதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

ஒக்டோபர் 18, 2023 - 15:50
கொழும்பு மாவட்டத்தில் அதிக நகர்ப்புற சனத்தொகை சதவீதம் - ஆய்வில் வெளியான தகவல்

இலங்கையின் நகர்ப்புற சனத்தொகை  44.57% ஆக அதிகரித்துள்ளதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான அறிக்கை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் நேற்று செவ்வாய்க்கிழமை (17) பாராளுமன்ற வளாகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. 

நகரமயமாக்கல் ஒரு நாட்டின் அபிவிருத்தியை பிரதிபலிக்கும் ஒரு முக்கிய காரணியாகும். இலங்கையில் நகரமயமாக்கல் தொடர்பாக கடந்த 2012ஆம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

சனத்தொகை  மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பின்படி, நாட்டின் நகரமயமாக்கல் 18.2% ஆகும். ஒரு பகுதியின் நகரமயமாக்கல் பல அளவுகோல்களின் அடிப்படையில் அளவிடப்படுகிறது. 

இந்த கணக்கெடுப்பின்படி, நாட்டில் உள்ள 276 உள்ளூராட்சி சபைகளில் உள்ள 12,773 கிராம அலுவலர் பிரிவுகளில் 3,025  நகர்ப்புறங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 

இது  23.68% ஆகும். இந்த கணக்கெடுப்பின்படி, அதிக நகர்ப்புற சனத்தொகை  சதவீதத்தைக் கொண்ட மாவட்டம் கொழும்பு ஆகும். இதன் சதவீதம் 96.74%. கம்பஹா மாவட்டம் 76.76% வீதத்தையும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 67.28% வீதத்தையும் காட்டுகிறது. நகர்ப்புற சனத்தொகையில் மிகக் குறைந்த சதவீதம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2.84% ஆகும்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!