காலநிலை மாற்றம்: வங்காள விரிகுடா கடற்பகுதியில் சூறாவளி!

டிசம்பர் 4, 2023 - 12:26
காலநிலை மாற்றம்: வங்காள விரிகுடா கடற்பகுதியில் சூறாவளி!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் “மிக்ஜாம்” என்ற சூறாவளி உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கு திசையில் 365 கிலோ மீற்றர் தொலைவில் இந்த சூறாவளி நிலைகொண்டுள்ளதாகவும் எனினும், மிக்ஜாம் சூறாவளி நாட்டை விட்டு வடமேற்கு நோக்கி நகரும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, நாளை (05) வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து, பின்னர் வடக்கு நோக்கி தெற்கு ஆந்திர கடற்கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இன்று (04) மேல், சப்ரகமுவ, வடக்கு, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவாக பதிவாகும் எனவும் அத்துடன், ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!