இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்கவுள்ள சீனா

சீன அரசாங்கம் 2025 ஆம் ஆண்டு கல்வியாண்டில் இலங்கையில் 4.3 மில்லியன் மாணவர்களுக்கு பாடசாலை சீருடைகளை மானியமாக வழங்கவுள்ளது.

செப்டெம்பர் 18, 2024 - 22:27
இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்கவுள்ள சீனா

சீன அரசாங்கம் 2025 ஆம் ஆண்டு கல்வியாண்டில் இலங்கையில் 4.3 மில்லியன் மாணவர்களுக்கு பாடசாலை சீருடைகளை மானியமாக வழங்கவுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இலங்கைக்கான சீனத் தூதுவர் மற்றும் சீன அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில், 2025 ஆம் ஆண்டிற்கு 4.3 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகள் மற்றும் 825 பிரிவினா பாடசாலைகளுக்கு தேவையான ஆடைகள் வழங்கப்படும்.

முதல் தொகுதி சீருடைகள் 2024 நவம்பர் 13 ஆம் திகதி வரும் என்றும், இரண்டாவது தொகுதி நவம்பர் 21 ஆம் திகதி வரும் என்றும், மூன்றாவது தொகுதி டிசம்பர் 20 திகதி வழங்கப்படும் என்றும் சீன அரசு உறுதி செய்துள்ளது.

பாடசாலை சீருடைகள் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர், முதல் கல்வித் தவணை தொடங்குவதற்கு முன்னர் விநியோகிக்கப்படும் என்றும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. (நியூஸ்21)

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!