உலக நாடுகளுக்கு மிகப் பெரிய சவாலாக சீனா - ரிஷி சுனக்
உலக நாடுகளின் பாதுகாப்பு மற்றும் செழுமைக்கு மிகப்பெரிய சவாலாக சீனா இருப்பதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளின் பாதுகாப்பு மற்றும் செழுமைக்கு மிகப்பெரிய சவாலாக சீனா இருப்பதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சீனா உள்நாட்டில் அதிக அளவில் சர்வாதிகாரமாக இருப்பதுடன், வெளிநாட்டில் உறுதியாக உள்ளதாக G7 உச்சிமாநாட்டிற்குப் பிறகு அவர் கூறினார்.
சீனா முன்வைக்கும் சவால்களைக் குறைக்க பிரித்தானியாவும் ஏனைய G7 நாடுகளும் பொதுவான அணுகுமுறையைப் பின்பற்றும் என்று சுனக் சுட்டிக்காட்டினார்.
சீனா, தாய்வானை தனக்குச் சொந்தமானது கூறிக்கொண்டு இருப்பதால் உலக நாடுகளின் மத்தியில் பதற்றங்கள் அதிகரித்துள்ளன.