சிறுவர் பாலியல் வீடியோ தயாரித்த  34 வயது நபர் கைது

ஆனமடுவ பகுதியை சேர்ந்த 34 வயது ஒரு ஆண், பாலியல் வீடியோ மற்றும் புகைப்படங்களை உருவாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். 

ஏப்ரல் 25, 2025 - 22:49
ஏப்ரல் 25, 2025 - 22:50
சிறுவர் பாலியல் வீடியோ தயாரித்த  34 வயது நபர் கைது

ஆனமடுவ பகுதியை சேர்ந்த 34 வயது ஒரு ஆண், பாலியல் வீடியோ மற்றும் புகைப்படங்களை உருவாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். 

அமெரிக்காவின் National Center for Missing & Exploited Children (NCMEC) அமைப்பின் புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்ம 20ஆம் திகதி கைது செய்யப்பட்ட குறித்த நபர் அலைபேசி பழுதுபார்க்கும் நிறுவனம் நடத்தியவர் என தெரிவிக்கப்படுகின்றது.

அவர் 2022 முதல் சமூக ஊடகங்கள் மூலம் வெளிநாடுகளில் வசிக்கும் குழந்தைகளின் பாலியல் வீடியோ மற்றும் படங்களை சேகரித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், அவர் இலங்கையில் வசிக்கும் 13 வயது சிறுமி ஒருவரின் பாலியல் காணொளிகள் மற்றும் படங்களை உருவாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு (Police Children & Women Bureau) மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!