ஆர்ப்பாட்டத்தால் சிலாபம் - கொழும்பு வீதியில் போக்குவரத்து பாதிப்பு

எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று (19) காலை ஆர்ப்பாட்டத்தை  ஆரம்பித்துள்ளனர்.

ஏப்ரல் 19, 2022 - 21:48
ஆர்ப்பாட்டத்தால் சிலாபம் - கொழும்பு வீதியில் போக்குவரத்து பாதிப்பு

சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் காக்கப்பள்ளி பகுதியில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று (19) காலை ஆர்ப்பாட்டத்தை  ஆரம்பித்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக சிலாபம் - கொழும்பு பஸ் சேவையும் முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!