வேட்பாளர்களின் சின்னங்கள் வெளியாகின; விரைவில் விஞ்ஞாபனம்!
ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, விஜயதாச ராஜபக்ஷ மற்றும் திலீத் ஜயவீர உள்ளிட்ட பல வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், பிரதான போட்டி மேற்கூறிய நான்கு வேட்பாளர்களுக்கிடையில் நான்கு முனை போட்டியாக தற்போது மாறியிருக்கிறது.

எதிர்வரும் செம்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முழுப் பட்டியல் விவரத்தை, இலங்கை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அப்பட்டியலில் அனைத்து வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் மற்றும் வாக்குச்சீட்டில் அவர்களது ஒழுங்கு வரிசை ஆகியன அடங்குகின்றன.
ஒழுங்கு வரிசைப்படி, ரணில் 37ஆவது இடத்திலும் சஜித் 21ஆவது இடத்திலும், அநுர 16ஆவது இடத்திலும், நாமல் 32ஆவது இடத்திலும் உள்ளனர்.
பிரதான போட்டி வேட்பாளர்களான சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க எரிவாயு சிலிண்டர் சின்னத்திலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ மலர் மொட்டு சின்னத்திலும், ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) சஜித் பிரேமதாச தொலைபேசி சின்னத்திலும், தேசிய மக்கள் சக்தியின் (JJB) அநுரகுமார திஸாநாயக்க திசைகாட்டி சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.
ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, விஜயதாச ராஜபக்ஷ மற்றும் திலீத் ஜயவீர உள்ளிட்ட பல வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், பிரதான போட்டி மேற்கூறிய நான்கு வேட்பாளர்களுக்கிடையில் நான்கு முனை போட்டியாக தற்போது மாறியிருக்கிறது.
விஞ்ஞாபனம் விரைவில் வெளியீடு
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரதான அரசியல் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனம் இம்மாத இறுதிக்குள் முன்வைக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இதற்குரிய ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், பல்துறைசார் பிரதிநிதிகளின் ஆலோசனைகளும் உள்வாங்கப்பட்டுள்ளன.
இதில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனம், எதிர்வரும் 26ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுன பெரமுன கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம், எதிர்வரும் செப்டெம்பர் முதல் வாரம் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் சுயாதீன வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனங்களும் இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என அறியமுடிகிறது.
வேட்பாளர்களின் சின்னங்கள் இதோ :