பஸ் கட்டண திருத்தம் கோரி அமைச்சுக்கு சென்ற பஸ் சங்கங்கள்
குறைந்தபட்ச பஸ் கட்டணத்தில் இருந்து ஏனைய கட்டணங்களும் அதிகரிக்கப்பட வேண்டும் என பஸ் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் விலை திருத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பஸ் தொழிற்சங்க பிரதிநிதிகள் குழுவொன்று போக்குவரத்து அமைச்சுக்கு சென்றுள்ளது.
போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்கவுடன் அவர்கள் கலந்துரையாடி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, குறைந்தபட்ச பஸ் கட்டணத்தில் இருந்து ஏனைய கட்டணங்களும் அதிகரிக்கப்பட வேண்டும் என பஸ் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் கட்டண திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.