மன்னர் சார்லஸ் பெயரில் இங்கிலாந்து கடவுச்சீட்டு வெளியீடு

மாற்றம் செய்யப்பட்டு, 'அவரது மாட்சிமை' என்ற பட்டத்துடன் மன்னர் சார்லஸின் பெயரை தாங்கி புதிய கடவுச்சீட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

ஜுலை 20, 2023 - 15:27
மன்னர் சார்லஸ் பெயரில் இங்கிலாந்து கடவுச்சீட்டு வெளியீடு

இங்கிலாந்தில் மன்னர் சார்லஸ் பெயரில் புதிய கடவுச்சீட்டுகள் வெளிடப்பட்டுள்ளன. 

இங்கிலாந்து ராணி II எலிசபெத் மறைவை தொடர்ந்து, அவரது மகன் சார்லஸ் மன்னராக முடி சூட்டப்பட்டார். அவர் 3ஆம் சார்லஸ் என அழைக்கப்படுகிறார். 

சார்லஸ் மன்னரானதை தொடர்ந்து, இங்கிலாந்து தேசிய கீதம், நாணயம் மற்றும் கடவுச்சீட்டுஉள்ளிட்டவற்றை மன்னரை முன்னிறுத்தி மாற்றங்கள் செய்யப்பட்டன. 

அந்த வகையில், இங்கிலாந்தில் இதுவரை 'அவளது மாட்சிமை' என்ற பட்டத்துடன் ராணி எலிசபெத் பெயரை தாங்கி கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டு வந்தன. 

தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு, 'அவரது மாட்சிமை' என்ற பட்டத்துடன் மன்னர் சார்லஸின் பெயரை தாங்கி புதிய கடவுச்சீட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

புதிய வடிவமைப்புடன் தயாரான கடவுச்சீட்டுகளை அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் வெளியிட்டார். 

இங்கிலாந்தில் 70 ஆண்டுகளுக்கு பிறகு கடவுச்சீட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!