“ஸ்ரீ பொன்னபலம் ராமநாதனின் வாழ்க்கை” நூல் வெளியீட்டு விழா
சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் எம்.வைத்திலிங்கம் இந்த நூலை எழுதியுள்ளார்.

சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் எம்.வைத்திலிங்கம் எழுதிய “ஸ்ரீ பொன்னம்பலம் இராமநாதனின் வாழ்க்கை” என்ற நூல், டிசெம்பர் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு வைபவ ரீதியாக வெளியிடப்படவுள்ளது.
யாழ். பரமேஸ்வரா கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தினால் வெள்ளவத்தையில் உள்ள கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் சனகரப்பிள்ளை மண்டபத்தில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது, யாழ். பரமேஸ்வரா கல்லூரி OBA கொழும்பு கிளையின் தலைவர் முன்னாள் DIG (போக்குவரத்து) T.பேரிம்பநாயகம் தலைமையில் நடைபெறவுள்ளதுடன், பிரதம அதிதியாக கொழும்பு ஸ்ரீ பொன்னபாலவனேஸ்வரர் ஆலயத்தின் அறங்காவலர் D.M.சுவாமிநாதன் கலந்துகொள்ளவுள்ளார்.
1921 ஆம் ஆண்டு சர்.பி.இராமநாதனால் நிறுவப்பட்ட முன்னணிப் பாடசாலைகளில் பரமேஸ்வரா கல்லூரியும் ஒன்று. புதிதாக உருவாக்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு வழி வகுக்கும் வகையில் 1974 ஆம் ஆண்டு பாடசாலை வளாகம் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டது.
பி. ராமநாதன், (1851-1930) 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் காலனித்துவ இலங்கையின் அரசியல் நிலப்பரப்பில் குறிப்பிடத்தக்க பாத்திரங்களை வகித்தார்.
இதில் 1879 முதல் 1892 வரை இலங்கையின் சட்ட சபையில் அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினராக (தமிழ்) இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.